Kodaikanal

26°C

Weather icon

Patchy rain nearby

Wind

5.8 km/h

Humidity

67%

View Full Forecast
கொடைக்கானலில் உள்ள மோயர் பாயிண்டிலிருந்து ஒரு பரந்த காட்சி, பள்ளத்தாக்கு மற்றும் சுற்றியுள்ள மலைகளைக் காட்டுகிறது.

மோயர் பாயிண்ட்

10-மைல் சாலையின் நுழைவாயிலுக்கு அருகில், கொடைக்கானல்

சிறந்த நேரம்

அக்டோபர் முதல் மார்ச் வரை

நுழைவு கட்டணம்

10 RS

நிலை

திறந்துள்ளது

மோயர் பாயிண்ட் பற்றி

கொடைக்கானலில் உள்ள அத்தனை பார்வையிடும் இடங்களிலேயே மோர் பாயிண்ட் அதன் எளிமைக்காகவும் சுலபமாக வந்தடையும் தன்மைக்காகவும் பெயர் பெற்றது. மற்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த மோயர் பாய்ண்ட் பரிசம் ஏரிக்கு செல்லும் வழியிலும் தூண்பாறைகளுக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பூலோக சொர்க்கத்தின் ஒரு பகுதி போல் காட்சி அளிக்கும் மோயர் பாய்ண்டிற்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பிரதேச கொடைக்கானல் சாலைகள் உங்களை வழிநடத்திச் செல்லும். இது வெல்லகாவி வனப் பகுதியை பார்த்தவாறு அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள மற்ற பார்வையிடும் இடங்களைப் போல் அல்லாமல் மலைப்பகுதியின் இயற்கை எழிலில் உங்களை மெய்மறக்கச் செய்யும் காட்சிகளை இந்த மோயர் பாயிண்ட் வழங்குகிறது. 40 மைல் சாலை என்று அழைக்கப்படும் கோஷன்ஸ் சாலைக்கு அடிக்கல் நாட்டும் பொழுது, 1929 ஆம் ஆண்டு சர் தாமஸ் மோயர் என்பவரால் இந்த இடம் ஆரம்ப புள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனால் காரணப் பெயராக மோர் பாயிண்ட் என்ற புனை பெயரையும் பெற்றது. இந்த சாலையின் துவக்கத்தை நினைவூட்டும் விதமாக நிறுவப்பட்ட ஒரு தூணையும் இங்கு நீங்கள் காணலாம். இந்த பகுதியில் வளைந்து நெளிந்து செல்லும் ஒரு பாதை, அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், இந்தப்பகுதியுளுள்ள சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளின் ஒட்டுமொத்த கம்பீரத்தில் திளைக்கும் ஓர் பார்வை கோபுரத்தையும் கொண்டுள்ளது.

இவ்விடத்தின் சிறப்பம்சமே இது கொடைக்கானலின் பிரத்யேக அடர்ந்த மூடுபனிப் படர்வை அடிக்கடிக் காண வழிவகுக்கும் ஓரிடத்தில் அமைந்திருப்பது தான். மூடுபனியாக இருப்பினும் உங்கள் மனநிலையை சூரியனின் கதிர்வீச்சைப் போல் தெளிவாக வைப்பதற்கு புத்துணர்வான பல்வேறு காட்சிகளையும் நமக்கு வள்ளல் போல வழங்கும் ஓரிடம் இந்த மோயர் பார்வைப்பகுதி. அன்றாட நகர வாழ்க்கையின் பரபரப்பையும் சலசலப்பையும் விட்டு அகன்று இயற்கையின் பாதத்தை தொழுவதற்கு ஒரு சிறந்த சாளரம் மோயர் பாயிண்ட். இங்கு தவழும் மலைகள் மற்றும் மிதக்கும் மேகங்கள் போல நம் மனது நிம்மதி பெறுவதற்கான அத்துணை அழகியலையும் உள்ளடக்கியது. வெண்மையான மூடுபனி மற்றும் மரங்களின் பசுமை சரிவர போர்த்திய மாமலைகளின் சரிவையும் முழு அழகுணர்ச்சியையும் கண்டுகளிக்க இதைவிட சிறந்த இடம் வேறெங்கும் கிட்டாது. கொடைக்கானலுக்கு உங்கள் பயணத்தின் பொழுது காணத்தவற விடக்கூடாத இடங்களின் பட்டியலில் முதன்மையானது மோயர் பாயிண்ட்.

சிறப்பம்சங்கள்

  • பரந்த காட்சிகள்: சுற்றியுள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.
  • வரலாற்று முக்கியத்துவம்: இப்பகுதியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த பொறியியலாளரான சர் தாமஸ் மோயரின் பெயரிடப்பட்டது.
  • 10-மைல் சாலைக்கு நுழைவாயில்: கொடைக்கானல் காடுகள் வழியாக ஒரு அழகிய பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

மெய்நிகர் சுற்றுலா

உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்

மோயர் பாயிண்ட் செல்ல ஆர்வமாக உள்ளீர்களா? அருகிலுள்ள சிறந்த தங்குமிடங்கள் மற்றும் போக்குவரத்து விருப்பங்களைக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

Support

+91 80564 37291

சுற்றுலாத் தலங்களுக்குத் திரும்பு

நகரின் மையத்திலிருந்து

மோயர் பாயிண்ட் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. இது 10-மைல் காட்டுச் சாலையின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. சுற்றுலா பேருந்து மற்றும் டாக்சிகள் இங்கு நிறுத்தப்படுகின்றன.

விமான நிலையத்திலிருந்து

மதுரை விமான நிலையத்திலிருந்து (115 கிமீ) வந்து கொடைக்கானல் நகரை அடையலாம். நகரில் இருந்து 10 நிமிடப் பயணத்தில் மோயர் பாயிண்டை அடையலாம்.

ரயில் நிலையத்திலிருந்து

கொடை ரோடு (80 கிமீ) அருகில் உள்ள ரயில் நிலையமாகும். நகரில் இருந்து ஆட்டோ அல்லது டாக்சி மூலம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சி முனையை அடையலாம்.

அருகிலுள்ள இடங்கள்

பைன் காடு
0.9 km

பைன் காடு

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கான பிரபலமான இடமான கொடைக்கானலில் உள்ள அழகான பைன் காடு வழியாக ஒரு அமைதியான நடைப்பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

டால்பின்ஸ் நோஸ்
1.6 km

டால்பின்ஸ் நோஸ்

டால்பின்ஸ் நோஸ், கொடைக்கானலின் அழகிய நிலப்பரப்பின் பறவைக் கண்ணோட்டத்தை வழங்கும் ஒரு தட்டையான பாறை προβολή ஆகும்.

தூண் பாறைகள்
1.9 km

தூண் பாறைகள்

கொடைக்கானலில் அடர்ந்த காடு மற்றும் மாயாஜால பனிமூட்டத்தின் நடுவே 400 அடி உயரமுள்ள மூன்று ராட்சத கிரானைட் தூண்களைப் பாருங்கள்.

குணா குகைகள்
1.9 km

குணா குகைகள்

கொடைக்கானலில் உள்ள மூன்று தூண் பாறைகளுக்கு இடையில் அமைந்துள்ள குணா குகைகள், டெவில்ஸ் கிச்சன் என்றும் அழைக்கப்படும் மர்மமான குணா குகைகளை ஆராயுங்கள்.

ரோஜா தோட்டம்
2.4 km

ரோஜா தோட்டம்

கொடைக்கானலில் உள்ள அழகான ரோஜா தோட்டத்தை ஆராயுங்கள், இது ரோஜாக்கள் மற்றும் பிற பூக்களின் பரந்த தொகுப்பைக் கொண்டுள்ளது.

ஃபேரி ஃபால்ஸ்
2.5 km

ஃபேரி ஃபால்ஸ்

அமைதியான பின்வாங்கல் மற்றும் சுற்றுலாவிற்கு ஏற்ற கொடைக்கானலில் உள்ள பருவகால நீர்வீழ்ச்சியான ஃபேரி ஃபால்ஸைக் கண்டறியுங்கள்.

பசுமைப் பள்ளத்தாக்கு காட்சி
3.3 km

பசுமைப் பள்ளத்தாக்கு காட்சி

முன்னர் தற்கொலை முனை என்று அழைக்கப்பட்ட பசுமைப் பள்ளத்தாக்கு காட்சி, கொடைக்கானலின் சமவெளிகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளின் மூச்சடைக்கக் கூடிய காட்சியை வழங்குகிறது.

சைலண்ட் வேலி வியூ
3.5 km

சைலண்ட் வேலி வியூ

கொடைக்கானலில் உள்ள இந்த மூச்சடைக்கக்கூடிய கண்ணோட்டத்தில் இருந்து சைலண்ட் வேலியின் அமைதியான மற்றும் பரந்த காட்சிகளை கண்டு மகிழுங்கள்.

கோக்கர்ஸ் வாக்
5.0 km

கோக்கர்ஸ் வாக்

பள்ளத்தாக்கு பள்ளத்தாக்கு கோக்கர்ஸ் வாக்கில் 2026-ல் ரசியுங்கள். அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க இப்போதே முன்பதிவு செய்து சலுகைகளைப் பெறுங்கள்!

பிரையண்ட் பூங்கா
5.2 km

பிரையண்ட் பூங்கா

2026 பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சிகளைக் காணுங்கள். அருகிலுள்ள சிறந்த ஹோட்டல்களில் தங்க இப்போதே முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை மகிழுங்கள்!